dinamalar telegram
Advertisement

ராகுல் பயணத்துக்கு சென்டிமென்ட் பார்க்கும் காங்.,:சுசீந்திரத்தில் இருந்து தொடங்க முடிவு

நாகர்கோவில்:கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை சென்டிமென்டாக கன்னியாகுமரிக்கு பதில் சுசீந்திரத்தில் இருந்து பயணத்தை தொடங்க காங்.,கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
காங்., தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் ராகுல் எம்.பி., கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ' (பராதமே ஒன்றிணைவோம்) நடை பயணம் அக்., 2ல் காந்தி ஜெயந்தி நாளில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. முன்கூட்டியே செப்., 7 ல் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட எந்த அரசியல் நகர்வுகளும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்ற சென்டிமென்ட் கிளப்பப்பட்டது. இதை தொடர்ந்து ராகுல் பயணத்தை சுசீந்திரத்தில் இருந்து தொடங்க காங்.,கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
சுசீந்திரத்தில் இருந்து அத்திரி முனிவர் இமயமலை சென்று திரும்பிய போது இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைத்ததாக தலவரலாறு கூறுகிறது. மும்மூர்த்திகள் ஒரே இடத்தில் அருள் பாலிக்கும் புண்ணிய மண்ணில் இருந்து ராகுல் பயணம் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்று தொண்டர்கள் நம்புகின்றனர். இந்த இடங்களை பார்வையிட காங்., தேசிய தலைவர்கள் வேணுகோபால், திக்விஜய்சிங், தினேஷ்குண்டுராவ், தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி, மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் இன்று வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement