தாய் பாலுக்கும் ஜி.எஸ்.டி., வரும் காங்., மாஜி தலைவர் காட்டம்
கோபி:''மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தால், கொஞ்ச நாளில் தாய்ப்பாலுக்கு கூட பா.ஜ.,வினர் ஜி.எஸ்.டி., வரி விதிப்பர்,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தான் செல்லும் இடங்களில் எல்லாம் சட்டத்தை மீறுகிறார். போலீசார் கூறுவதை கேட்பதும் கிடையாது.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தான் செல்லும் இடங்களில் எல்லாம் சட்டத்தை மீறுகிறார். போலீசார் கூறுவதை கேட்பதும் கிடையாது.
போலீசார் அறிவுறுத்தியும், ஈரோடில் ஊர்வலமாக சென்றுள்ளார். முன்னாள் காவல் துறை அதிகாரிக்கு இது அழகா?பால், நெய், தயிர் மீது ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தால், இன்னும் கொஞ்ச நாளில், தாய்ப்பாலுக்கு கூட ஜி.எஸ்.டி., வரி விதிப்பர்.நெசவாளர்களுக்காக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தெருவில் இறங்கி போராடுவதை விட, அங்கு ஓடும் சாக்கடைகளை சுத்தம் செய்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!