dinamalar telegram
Advertisement

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் புறநோயாளிகள் பிரிவு நாளை திறப்பு



தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின், புறநோயாளிகள் பிரிவு, நீண்ட இழுபறிக்கு பின், நாளை திறக்கப்பட உள்ளது.தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இது, ஆயுஷ் மருத்துவத்தை ஊக்குவிக்கும் தேசிய அளவிலான ஏழு கல்வி நிறுவனங்களில் ஒன்று.பொது மருத்துவம், குணபாடம், வர்மம், யோகம் உட்பட, சிறப்பு மருத்துவங்களும், குழந்தை மருத்துவம், நோய் நாடல், நஞ்சு நுால் மருத்துவம் உள்ளிட்ட எட்டு நோய்களுக்கு, இங்கு சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.இவற்றின் கீழ், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. அதற்கு, 10 கவுன்டர்கள் செயல்படுகின்றன. புறநோயாளிகள் பிரிவு, காலை 8:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை செயல்படுகிறது.குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதால், வார நாட்களில் 2,200 பேரும், வார இறுதி நாட்களில் 2,500 பேரும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். எனவே, புறநோயாளிகள் பிரிவுக்கு புதிய கட்டடம் கட்ட, மத்திய அரசுக்கு மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைத்தது.இதற்காக, 2016ல், மத்திய அரசு, 31.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. 2018, மே, 4ம் தேதி, புதிய கட்டடம் கட்ட, அடிக்கல் நாட்டப்பட்டது. தரை, முதல் மற்றும் இரண்டாம் தளங்களுடன், 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், இந்த புறநோயாளிகள் பிரிவு கட்டப்பட்டுள்ளது.இதில், 32 புறநோயாளிகள் ஆலோசனை மையங்களும், கூட்ட அரங்கு, யோகா மையம், காத்திருப்போர் அறை என, 16 பல்நோக்கு அறைகள், 'சோலார்' விளக்குகள் உட்பட, பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன.இதற்கு, ஆண்டுதோறும் பராமரிப்பு நிதியாக, மத்திய அரசு சார்பில், 30 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கட்டுமான பணிகள் முடிந்தும், கட்டடம் திறக்கப்படாமல் இருந்தது.நீண்ட இழுபறிக்கு பின், நாளை, 13ம் தேதி, இந்த கட்டடம் திறக்கப்பட உள்ளது. இதை, மத்திய 'ஆயுஷ்' அமைச்சர், சர்பானந்தா சோனாவால் திறந்து வைக்க உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement