dinamalar telegram
Advertisement

தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட்சென்னையில் 15ம் தேதி துவக்கம்

சென்னை :சென்னையில், 52 அணிகள் பங்கேற்கும் தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி, வரும் 15ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடக்கிறது.இந்திய டென்னிஸ் பால் கிரிக்கெட் கூட்டமைப்பு ஆதரவுடன், தமிழ்நாடு டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சார்பில், 27வது சப் - ஜூனியருக்கான தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி, வரும் 15ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை, சென்னையில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில் நடக்கிறது.இப்போட்டியில், குஜராத், ஜம்மு - காஷ்மீர், கேரளா உட்பட நாடு முழுதிலும் இருந்து, ஆண்களில் 32 அணிகளும், பெண்களில் 20 அணிகளும் பங்கேற்க உள்ளன.போட்டிகள், 'லீக்' முறையில் நான்கு குழுவாக பிரிக்கப்பட்டு, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு 16 அணிகளும், காலிறுதியில் இருந்து, 'நாக் - அவுட்' முறையில் எட்டு அணிகளும் மோத உள்ளன. தொடர்ந்து, தேர்வாகும் அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் மோத உள்ளன.சமீபத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருபாலரிலும் தலா 15 வீரர் - வீராங்கனையர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான பயிற்சி முகாம், கோடம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அரசு உதவி பெறும் பள்ளியில் நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement