dinamalar telegram
Advertisement

ரூ.13 கோடி அம்பர்கிரீஸ் வைத்திருந்த 5 பேர் கைது

நாகர்கோவில்:குளச்சல் பகுதியில், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 'அம்பர்கிரீஸ்' எனப்படும் திமிங்கல உமிழ் நீர் கட்டி பறிமுதல் செய்யப்பட்டு, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், காந்தி சிலை பகுதியில், நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்த காரில் போலீசார் சோதனை செய்தனர்.அப்போது, இரண்டு அம்பர்கிரீஸ் கட்டிகள் காரில் இருந்தது.
இதன் சர்வதேச மதிப்பு, 13 கோடி ரூபாய். காரில் இருந்த மிடாலத்தைச் சேர்ந்த விபின், 32, மத்திகோடு அரவிந்த், 26, உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வனத்துறையினர் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement