dinamalar telegram
Advertisement

தனியார் பள்ளி மாணவர்கள் உலக சாதனை நிகழ்ச்சி

ADVERTISEMENT

தாம்பரம், :சிட்லபாக்கத்தில் உள்ள, லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின், 75வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகமும், 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிர்வாகமும் இணைந்து, பள்ளி வளாகத்தில் நடத்திய இந்நிகழ்ச்சியில், முதலில் சிலம்பம், வாள் வீச்சு உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.நாட்டின் 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் விதமாக, மாணவர்கள் அனைவரும், '75' என்ற வடிவத்தில் அமர்ந்த பின், சுதந்திரம் அடைந்தது முதல் நம் நாடு, ரயில்வே உட்பட, ஒவ்வொரு துறைகளிலும் செய்த, சாதனைகளை ஒவ்வொன்றாக மாணவ - மாணவியர் பட்டியலிட்டனர்.இதையடுத்து, 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனத்தினர், இந்நிகழ்வை உலக சாதனையாக அங்கீகரித்து, சான்றிதழ் வழங்கினர். இதில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர், -ஆசிரியைகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement