dinamalar telegram
Advertisement

சென்ட்ரலில் திருடு போன200 மொபைல் போன் மீட்பு


சென்னை, :சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கடந்த ஆறு மாதங்களில் திருடு போன 200 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, பயணியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: கஞ்சா, குழந்தை கடத்தல், மொபைல் போன் மற்றும் நகை திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல் சம்பவங்களில் ஈடுபடுவோரை விரைந்து பிடிக்க, 'சிசிடிவி' கேமராக்கள் பயனுள்ளதாக இருக்கின்றன.மொபைல் போன் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, கடந்த ஆறு மாதங்களில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50 பேரை கைது செய்துள்ளோம். திருடு போன 200 மொபைல் போன்களை மீட்டு, பயணியரிடம் ஒப்படைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement