dinamalar telegram
Advertisement

பட்டம் விடும் திருவிழா இணையத்தில் நுழைவுச்சீட்டு

சென்னை, :மாமல்லபுரத்தில் நடக்க உள்ள சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை குறித்து சுற்றுலாத்துறை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் முதல் முறையாக, சுற்றுலாத்துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், நாளை சர்வதேச பட்டம் விடும் திருவிழா துவங்குகிறது. அமைச்சர்கள் அன்பரசன், மதிவேந்தன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.பட்டம் விடும் திருவிழா, நாளை முதல் 15ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்க உள்ளன. வெளிநாட்டில் இருந்து நான்கு குழுக்கள், இந்தியாவில் இருந்து ஆறு குழுக்கள் என, மொத்தம் 10 குழுக்கள், பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்க உள்ளன.பட்டம் விடும் திருவிழா, பகல் 12:00 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை நடக்கும். பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக, மாலை 6:00 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்க சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்.மற்றவர்கள் www.tnikf.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, நுழைவுச்சீட்டு பெற்றுக் கொள்ளவும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement