dinamalar telegram
Advertisement

 வாகன போலி பதிவு எண்போலீசார் ஆய்வு



சென்னை : 'போலியாக வாகன பதிவு எண் வைத்திருப்போர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.புதிதாக வாகனங்கள் வாங்கும் போது, அதுகுறித்த விபரங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, பரிவாஹன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், செயின் மற்றும் மொபைல் போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர், வாகன பதிவு எண் பலகையை மாற்றி விடுகின்றனர். இதனால், குற்றம் நடந்த பின், 'சிசிடிவி கேமரா' வாயிலாக கூட, இவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.இதனால், சென்னையில் முக்கிய சிக்னல்கள், சந்தைகள் மற்றும் குடிசை மாற்று குடியிருப்பு பகுதிகளில், போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 4,633 வாகனங்களின் பதிவு எண் விபரங்களை ஒப்பிட்டு, ஆய்வு செய்தனர். சில வாகனங்களில் பதிவு எண்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டு இருந்தது. அதுபற்றி விசாரித்து வருகின்றனர். 'போலியாக வாகன பதிவு எண் பலகை பொருத்தி இருப்போர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement