dinamalar telegram
Advertisement

டாட்டூ போட வந்தவரை கடத்திபணம் மற்றும் மடிக்கணினி பறிப்பு

மதுரவாயல் :'டாட்டூ' போட வந்தவரை கடத்தி, பணம் மற்றும் மடிக்கணினி பறித்த கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 28. இவர், கனடா நாட்டில் பணி புரிகிறார். சில தினங்களுக்கு முன் விடுமுறையில் சென்னை வந்தார்.சரமாரி தாக்குஇவர் நேற்று 'டாட்டூ' என்ற பச்சை குத்த வேண்டி, வடபழநியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்றார். அங்கிருந்த இருவர், இதை விட சிறப்பாக டாட்டூ வரையும் இடம் உள்ளது எனக்கூறி, அவரை காரில் அழைத்து சென்றனர்.கோயம்பேடு அருகே வந்தபோது, 'தங்களது நண்பர்கள் இருவருக்கு டாட்டூ குத்த வேண்டும்' எனக்கூறி, மேலும் இருவரை காரில் ஏற்றிஉள்ளனர்.கார் மதுரவாயல் பை - பாஸ் சாலையில் சென்ற போது, நான்கு பேரும் சேர்ந்து விக்னேஷை தாக்கி, அவரிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய், ஏ.டி.எம்., கார்டு, மொபைல் போன் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றைப் பறித்தனர்.வலைபின், போரூர் சுங்கச்சாவடி அருகே, அவரை காரில் இருந்து தள்ளிவிட்டு நான்கு பேரும் தப்பி சென்றனர். இது குறித்து விக்னேஷ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்துக்கு சென்ற மதுரவாயல் போலீசார், விக்னேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.

பீதியில் மக்கள்

மதுரவாயல், போரூர், வானகரம், அய்யப்பன்தாங்கல் பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாகன ஓட்டிகளை குறிவைத்து கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது.போரூர் சுங்கச்சாவடி அருகே இதே போல் வழிப்பறியில் ஈடுபட்டு, பை - பாஸ் சாலை மற்றும் அணுகு சாலை வழியாக குற்றவாளிகள் தப்பியோட வசதியாக இருப்பதே, இந்த பகுதியை தேர்ந்தெடுத்து வழிப்பறியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள், வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.எனவே, போலீசார் இது குறித்து தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement