dinamalar telegram
Advertisement

காதலன் வீட்டில்பெண் தற்கொலை

சாஸ்திரிநகர், :கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சிவா, 30. இவர், பெசன்ட்நகரில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ரேகா, 29. இருவரும், ஆறு ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.மனக்கசப்பால், இரண்டு ஆண்டுகளாக பிரிந்துள்ளனர். இந்த நிலையில், ரேகாவுக்கு வேறு இடத்தில் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.இது பிடிக்காமல் நேற்று ரேகா, பெசன்ட்நகர் வீட்டுக்கு சென்று, சிவாவிடம் திருமணம் செய்ய வலியுறுத்தி உள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன விரக்தி அடைந்த ரேகா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சாஸ்திரிநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement