dinamalar telegram
Advertisement

அரசு பஸ் மோதி முதியவர் மரணம்


ஆவடி, ஆவடி கோவர்த்தனகிரியில் வசிப்பவர் மூர்த்தி, 69. நேற்று முன்தினம் மாலை 3:00 மணி அளவில் வீட்டிற்கு பொருட்கள் வாங்க சென்றார்.ஆவடி -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, பூந்தமல்லியிலிருந்து ஆவடியை நோக்கி சென்ற தடம் எண்: 62 அரசு பேருந்து மோதியதில் மூர்த்தி படுகாயம்அடைந்தார்.அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் இறந்தார். விபத்து குறித்து, அரசு பேருந்து ஓட்டுனர் சரவணன், 40, என்பவரிடம், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement