dinamalar telegram
Advertisement

சுதந்திர தின அமுத பெருவிழா ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

ADVERTISEMENT
நாகர்கோவில்:சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி கன்னியாகுமரியில், 75 ராணுவவீரர்கள் தேசிய கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர்.
தொடர்ந்து, 150 அடி உயர கொடி கம்பத்தில் மீண்டும் கொடியேற்றப்பட்டது. சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, திருவனந்தபுரம் முகாமில் இருந்து 75 ராணுவ வீரர்கள், பிரிகேடியர் லலித்சர்மா தலைமையில் கன்னியாகுமரி வந்தனர். இவர்கள் தனி படகு மூலம் கடலில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று, 75 அடி நீள தேசிய கொடியை பிடித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், இவர்கள் கடற்கரையில் இருந்து, தேசிய கொடியேந்தி மேஜர் பகஜித் தலைமையில் அணிவகுப்பு நடத்தினர். விவேகானந்தபுரம் வழியாக மகாதானபுரம் வந்த இவர்கள் அங்குள்ள, 150 அடி உயர கொடிகம்பத்தில் தேசிய கொடி ஏற்றினர்.
ஏற்கனவே இந்த கம்பத்தில் ஏற்றப்பட்ட கொடி சேதம் அடைந்ததால், அது இறக்கப்பட்டு ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த கொடியின் பராமரிப்பு, பாதுகாப்பு ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்டுஉள்ளது. ராணுவ வீரர்களின் பேரணி குளச்சல், பூவாறு வழியாக ஆக., 16ல் திருவனந்தபுரம் சென்றடைகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement