dinamalar telegram
Advertisement

கூலி தொழிலாளி கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை

குளித்தலை அருகே நடந்த, கூலி தொழிலாளி கொலை வழக்கில், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கரூர் மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை நச்சலுார் தாட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் வடிவேல், 30; கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த, ஒரு பெண்ணை கேலி செய்துள்ளார். இதனால், அந்த பெண்ணின் உறவினர்கள் வேலு, 38, சதீஷ்குமார், 35, சங்கர், 24, ஆகியோர் கடந்த, 2020 ஜூலை, 9ல் வடிவேலுவை அடித்து உதைத்துள்ளனர்.

அதில், படுகாயமடைந்த வடிவேல், திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, குளித்தலை போலீசார் வேலு, சதீஷ்குமார், சங்கர் ஆகியோரை கைது செய்து, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், வேலு, சதீஷ்குமார், சங்கர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா, 11 ஆயிரத்து, 100 ரூபாய் அபராதமும் விதித்து, முதன்மை நீதிபதி சண்முக சுந்தரம் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement