dinamalar telegram
Advertisement

தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக ஆர்.டி.ஓ.,விடம் கவுன்சிலர்கள் மனு

தி.மு.க.,-எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக, குளித்தலை நகராட்சி, தி.மு.க., கவுன்சிலர் சமீமா தலைமையில் கவுன்சிலர்கள், நேற்று காலை, ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

குளித்தலை நகராட்சி எல்லைக்குட்பட்ட முக்கிய வீதிகள், கடை வீதிகளில் சிறுகுறு வியாபாரிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து, கடைகள், பந்தல்கள் அமைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், குளித்தலை நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, பல கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதால், பஸ்கள் வந்து செல்ல முடியாமல், இடையூறு ஏற்படுகிறது. குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக செல்லும் கழிவுநீர் வடிகால், மற்றும் காவிரி நகர் பகுதிகளில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், பள்ளி மாணவியர் சென்று வர மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குளித்தலை நகரப்பகுதியில், 13 பாசன வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவி வருகிறது. இதுகுறித்து, பலமுறை தி.மு.க., கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையை, தற்போது, தி.மு.க., கவுன்சிலர்களே கோரிக்கை மனுவாக அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், நெடுஞ்சாலை, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதுகுறித்து, வியாபாரிகள், குளித்தலை எம்.எல்.ஏ.,விடம்
முறையிட்டனர்.
இதனால், ஆக்கிரமிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, எம்.எல்.ஏ.,வின் கோரிக்கையை மீறி ஆக்கிரமிப்புகளை அகற்ற, கவுன்சிலர்கள் ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்துள்ளனர். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, குளித்தலை ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி கூறுகையில், ''தி.மு.க., கவுன்சிலர்களின் கோரிக்கை குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,''
என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement