dinamalar telegram
Advertisement

விபத்தில் லாரியில் சிக்கிய டிரைவர் தீயணைப்பு துறையினர் மீட்டனர்

க.பரமத்தி அருகே நடந்த விபத்தில், தண்ணீர் லாரியில் சிக்கி கொண்ட டிரைவரை, தீயணைப்பு துறை வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
கரூர் மாவட்டம், தளவாப்

பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 28; லாரி டிரைவர். இவர் நேற்று காலை, லாரியில் தண்ணீர் ஏற்றிக்கொண்டு, க.பரமத்தி பவித்திரம்-பாலமலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பிரபாகர், 26, என்பவர் ஓட்டிச்சென்ற, எம்.சாண்ட் ஏற்றிவந்த டிப்பர் லாரி, தண்ணீர் லாரி மீது மோதியது. அதில், தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சுரேஷ் சிக்கி கொண்டார்.
தகவலறிந்த, கரூர் தீயணைப்பு துறையினர் சென்று, தண்ணீர் லாரியில் சிக்கிக் கொண்ட டிரைவர் சுரேசை உயிருடன் மீட்டு, கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எம்.சாண்ட் லாரி டிரைவர் பிரபாகருக்கும், லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து, க.பரமத்தி போலீசார்
விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement