செய்திகள் சில வரிகளில் கரூர்
தபால் ஊழியர்கள்
ஆர்ப்பாட்டம்
கரூர், ஆக. 11-
கரூர் மாவட்ட, பி.ஜே.சி.ஏ., (தபால் ஊழியர்கள்) அமைப்பு சார்பில், கோட்ட செயலாளர் முருகேசன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; தொழிற்சங்க காலாந்திர கூட்டங்களை நேரடியாக நடத்த வேண்டும்; கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட, 18 மாத டி.ஏ., நிலுவை தொகையை வழங்க வேண்டும்; ஆர்.எம்.எஸ்., அலுவலகங்களில் வாரத்துக்கு ஐந்து நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், கோட்ட செயலாளர்கள் குமரன், தர்மலிங்கம், கிளை செயலாளர்கள் மகேஸ்வரி, ஆனந்தவேல், மைக்கேல்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
மானாவாரி நிலத்தில்
விதை துாவும் பணி
கிருஷ்ணராயபுரம், ஆக. 11-
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, வயலுார், பஞ்சப்பட்டி, கருப்பத்துார் ஆகிய பஞ்., கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, மானாவாரி நிலங்களில், சாகுபடி செய்யும் வகையில், ஆடி மாதம் கோடை உழவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், விளை நிலங்களில் எள், துவரை, கடலை, உளுந்து ஆகிய விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது.
சத்துணவு அமைப்பாளர்கள்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
குளித்தலை, ஆக. 11-
குளித்தலை யூனியன் அலுவலகத்தில், நேற்று மாலை, 4:00 மணியளவில் சத்துணவு அமைப்பாளர்கள், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு அமைப்பாளர்கள் சங்க வட்டார தலைவர் கோகிலா தலைமை வகித்தார்.
அதில், முதல்வரின் காலை உணவு திட்டத்தை, சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்க வேண்டும் என, வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், தோகைமலை யூனியன் அலுவகத்திலும்
நடந்தது.
டி.என்.பி.எல்., நிறுவனம்
நிதி உதவி வழங்கல்
கரூர், ஆக. 11--
கரூர் மாவட்டம், காகிதபுரம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில், சமுதாய நலப்பணி திட்டத்தில், நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பொது மேலாளர் (மனிதவளம்) சுரேஷ் தலைமை
வகித்தார்.
இதில், மறவாபாளையம் மற்றும் கரியாம்பட்டி உள்ளிட்ட நான்கு கோவில்களுக்கு கட்டமைப்பு பணிகளுக்கு நிதி உதவியாக, 95 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முதுநிலை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் உடனிருந்தார். காங்., சத்தியாகிரக நடைபயணம்
குளித்தலை, ஆக. 11-
குளித்தலை நகர காங்., மற்றும் வட்டார காங்., சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, ஜி.எஸ்.டி.,யை கண்டித்து சத்தியா கிரக நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைபயண நிகழ்ச்சிக்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை தலைவர் பொன்னுசாமி, வட்டார காங்., தலைவர் சீதா ஆறுமுகம், மாநில விவசாய அணி செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர்.
குளித்தலை சுங்க கேட்டிலிருந்து தொடங்கிய நடைபயணம், முக்கிய வீதிகள் வழியாக சென்று, குளித்தலை பெரிய பாலத்தில் முடிவடைந்தது. இதில், 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கலவை இயந்திரத்தில் சிக்கி சென்ட்ரிங் தொழிலாளி பலி
குளித்தலை, ஆக. 11-
தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா, கொவக்காண்டிபட்டியை சேர்ந்தவர் ஞானவேல், 22; இவர், தனியார் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்தில், சென்ட்ரிங் வேலை செய்து
வந்தார்.
இந்நிலையில், இரும்பூதிப்பட்டி மெயின் ரோடு,
கோட்டை கரையான் பட்டி பிரிவு சாலையில், கலவை இயந்திரத்தில் சிமெண்ட் கலவை கொட்டும் பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கலவை இயந்திரத்தில் விழுந்த ஞானவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, சிந்தா
மணிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!