dinamalar telegram
Advertisement

இருவரின் காதல் டார்ச்சர் பெண் தற்கொலை: ஒருவர் கைது

ADVERTISEMENT
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இருவரின் காதல் டார்ச்சரால் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்தார். ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மார்த்தாண்டம் அருகே மருதன்கோடு இலங்கன்விளையை சேர்ந்தவர் திவ்யா 20. கல்லுாரி படிப்பு முடித்து மேல் படிப்புக்கு தயாராகி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் 20. இருவரும் காதலித்து வந்த நிலையில் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளனர்.

திவ்யா இனையத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து படித்த போது அதே பகுதியை சேர்ந்த ஷெர்லின் புரூஸ் 19, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாகியுள்ளது. இதை அறிந்த ரஞ்சித், தன்னுடன் திவ்யா இருக்கும் போட்டோக்களை வெளியிட்டார். திவ்யா தன் தாய் வீட்டுக்கு சென்றால் பழைய காதலனை பார்க்க போகிறாயா என கேட்டுஷெர்லின்புரூஸ் டார்ச்சர் செய்துள்ளார்.

இதனால் மனவருத்தம் அடைந்த திவ்யா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மார்த்தாண்டம் போலீசார்ஷெர்லின்புரூசை கைது செய்தனர். ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement