dinamalar telegram
Advertisement

செப். 7ல் ராகுல் பாதயாத்திரை குமரியில் நிர்வாகிகள் ஆய்வு

நாகர்கோவில்:செப். ஏழாம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் தொடங்க உள்ள பாதயாத்திரை ஏற்பாடுகளை மாநில காங். நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

காங். தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ (பாரதமே ஒன்றிணைவோம்) நடை பயணம் செல்ல ராகுல் முடிவு செய்துள்ளார். 12 மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக 148 நாட்கள் மூவாயிரத்து 500 கி.மீ. துாரம் பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ராகுலுடன் 300 முக்கிய பிரமுகர்கள் நடைபயணத்தில் பங்கேற்கின்றனர்.

கன்னியாகுமரியில் அக்.2ல் துவங்குவதாக இந்த பயணம் மாற்றப்பட்டு செப். 7 ல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரியில் இருந்து நாகர்கோவில் தக்கலை மார்த்தாண்டம் களியக்காவிளை வழியாக கேரளா செல்கிறது. குமரி முதல் களியக்காவிளை வரை 70 கி.மீ. தமிழக பகுதியில் 2 நாட்கள் பயணம் செல்கிறது. ராகுல் செல்லும் பாதை ஏற்பாடுகளை காங். தேசிய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் எம்.பி. ஜோதிமணி எம்.எல்.ஏ.க்கள் ரூபிமனோகரன் செல்வபெருந்தகை ஆய்வு செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement