dinamalar telegram
Advertisement

கலெக்டர்அலுவலகத்துக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

திருச்சி:திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர் ஒருவர் போன் செய்து உள்ளார்.திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்னும், 10 நிமிடத்தில் குண்டு வெடிக்கும் என, தெரிவித்துள்ளார்.உடனே, போலீசார், மோப்ப நாய் 'டெய்சி' உதவியுடன், வெடிகுண்டு சோதனை கருவிகளை வைத்து, கலெக்டர் அலுவலக வளாகம் முழுதும் தீவிர சோதனை நடத்தினர்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற சோதனையில், வெடி குண்டு மிரட்டல் புரளி எனத் தெரிந்தது. போன் செய்த மர்ம நபர் பற்றி, போலீசார் நடத்திய விசாரணையில், எடமலைப்பட்டி, புதுாரைச் சேர்ந்த பழனிச்சாமி, 42, என்பவர் மது போதையில் மிரட்டல் விடுத்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement