dinamalar telegram
Advertisement

போதையில் மயங்கிய மாணவியரால் அதிர்ச்சி

கரூர்:தமிழகம் முழுதும் இன்று, அனைத்து பள்ளிகளிலும் போதை விழிப்புணர்வு பிரசாரம் நடக்க உள்ள நிலையில், கரூரில் பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்த மூன்று மாணவியர், குடிபோதையில் சாலையில் சீருடையுடன் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம், சர்ச் கார்னர் பகுதியில், நேற்று இரவு மூன்று மாணவியர் குடிபோதையில் மயங்கி கிடந்தனர். இதுகுறித்து, மாவட்ட காவல் கட்டுப்பாடு அறைக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

விசாரணையில், மூன்று மாணவியரும், கரூர் மாநக ராட்சி பள்ளியில், பிளஸ் 1 படிப்பதும், பொதுத்தேர்வில் தோல்வியடைந்து, நேற்று மறுதேர்வு எழுத வந்தவர்கள் எனவும் தெரிந்தது. தேர்வு முடிந்த பின், மூன்று பேரும் மறைவான இடத்துக்கு சென்று, மது அருந்தி, கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் மயங்கி கிடந்தது தெரிந்தது.மூன்று மாணவியரின் பெற்றோரையும் வரவழைத்து, அறிவுரை கூறி, போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவியர் தாங்களாகவே மது வாங்கினரா அல்லது வேறு யாராவது மது வாங்கிக் கொடுத்தனரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.தமிழகம் முழுதும் இன்று காலை அனைத்து பள்ளிகளிலும், போதை விழிப்புணர்வு பிரசாரம் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், கரூர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement