dinamalar telegram
Advertisement

கணவருடன் சண்டைபஞ்., ஊழியர் தற்கொலை

ADVERTISEMENT
நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார்.
இவரது மனைவி ஞானபாக்கியபாய் 30. கொட்டாரம் ஊராட்சி அலுவலகத்தில் துாய்மை இந்தியா திட்ட பணியாளராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் கணவருடன் 'வீடியோகாலில்' பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த ஞானபாக்கியபாய் இரண்டு குழந்தைகளையும் துாங்க வைத்த பின், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செந்தில் நீண்ட நேரம் போன் செய்தும் எடுக்காததால் உறவினர்களை வீட்டுக்கு அனுப்பி பார்க்க சொன்னார். அவர்கள் சென்ற போது, மனைவி இறந்தது தெரிய வந்தது. கன்னியாகுமரி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement