பா.ஜ., போராட்டம்: 320 பேர் கைது
துாத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வள்ளி குகை நடைபாதையில் ஆக. 2 முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் சத்ரு சம்ஹாரயாகம் நடத்தினார்.யாகத்தின் போது பக்தர்கள் அந்த வழியாக செல்ல தடை செய்யப்பட்டது.
இதற்கு அனுமதித்து உடன் இருந்த ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து பா.ஜ. நிர்வாகிகள் நேற்று திருச்செந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பா.ஜ. ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் நாச்சியப்பன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதியில்லாததால் 75 பெண்கள் உட்பட 320 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!