dinamalar telegram
Advertisement

பா.ஜ., போராட்டம் 320 பேர் கைது

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வள்ளி குகை நடைபாதையில் இம்மாதம், 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார்.

யாகத்தின் போது பக்தர்கள் அவ்வழியாக செல்ல தடை செய்யப்பட்டது. இதற்கு அனுமதித்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து, பா.ஜ., நிர்வாகிகள் திருச்செந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ., ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் நாச்சியப்பன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி இல்லாததால், 75 பெண்கள் உட்பட, 320 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement