dinamalar telegram
Advertisement

கோவையில் விமானங்களின் எண்ணிக்கை குறைகிறது

ADVERTISEMENT
கோவை: பயணிகள் எண்ணிக்கை குறைவு எதிரொலியாக, கோவையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் சார்ஜா, சிங்கப்பூருக்கும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களுக்கு, விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் வரை, 28 விமானங்கள் வரை இயக்கப்பட்டன. இந்நிலையில், உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் விமானங்களின் எண்ணிக்கையும், 23 ஆக குறைந்துள்ளது.

விமானநிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறுகையில், ''கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கான விமானங்களில், பயணிகள் அதிகம் செல்வதால், டிக்கெட் கிடைப்பதே அரிதாக உள்ளது. அதேநேரம், உள்நாட்டு போக்குவரத்து பிரிவில், இயக்கப்படும் விமான சேவை அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன. சில விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், போதிய எண்ணிக்கையில் பயணிகள் இல்லாததுதான் என, அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இனி வரும் நாட்களில், நிறுத்தப்பட்டுள்ள விமான சேவை மீண்டும் துவங்கும் என நம்புகிறோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  ஐநூறு ஆயிரம் ருபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதிலிருந்து, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிந்ததே, ஜி எஸ் டி ஒருபுறம், மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொழிலார் பற்றாக்குறை எல்லாம் கோவையை ஆட்டிப்படைக்கிறது, ஹோட்டல் துறை நிலைமை அதற்க்குமேல் மோசமாக உள்ளது, புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க வராதது, (தற்போது உள்ளூர்வாசிகளால் நடத்தப்படும் சில பெரிய நிறுவனங்கள் வேறு யாரையும் வர விடாமல் தடுக்கிறார்களா????) ஸ்மார்ட் சிட்டி என அறிவித்தபிறகு ஏற்பட்ட உட்கட்டமைப்பு சீரழிவு வேறு, குறைந்தபட்சம் போக்குவரத்துக்கே நிறைந்து நெரிசலை உண்டாக்கும் சாலைகள், மருத்துவமனைகளின் கட்டணக்கொள்ளை, சில கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளை எல்லாம் தான் கோவையின் இந்நிலைக்கு காரணம்.

 • T.SRINIVASAN - GUDUVANCHERI,இந்தியா

  முன்பைவிட இப்போது விமான பயணச்சீட்டு விலை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது.

 • Girija - Chennai,இந்தியா

  இது எதனை உணர்த்துகிறது? கோவையில் தொழில் தொடங்க பிற மாநிலத்தவர் விரும்வில்லை என்று. அதிக வரி, அதிக லஞ்சம், கட்ட பஞ்சாயத்து, உள்ளூர் தொழிலாளிகளின் அதிக கூலி, டாஸ்மாக், ரௌடிகளின் அட்டகாசம், விலைவாசி பிற மாவட்டங்களைவிட கோவையில் அதிகம், கொலை, கொள்ளை, கம்யூனிஸ்ட்கள் அடாவடி போன்றவை காரணம். தினமும் உடன் பிறப்புகளும், உண்டியல் கட்சிகளும் எதாவது ஒரு காரணத்திற்காக நோட்டு புத்தகம், உண்டியலுடன் வியாபாரிகளிடம் வசூல் வேட்டை, அலுவலகத்தில் பணிபுரியும் மிடில் கிளாஸ் சிடம் எதாவது ஒரு காரணத்திற்காக வாகன பைன் என்ற பெயரில் லஞ்சம், கோவையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இத்தகு பயந்து சந்து, பொந்து வழியாக திருடர்களை போல் பயணிக்கும் அவலம், பத்தாயிரம் ஆண்டு வருவாய் உள்ள வீட்டிற்கு ஆண்டு வரி ரூ 3500, இதை தவிர தண்ணீர் வரி, குப்பை வரி அடுத்து மின்கட்டண உயர்வு ....... விட்டால் போதும் என்று கோவைக்கு குடி பெயர்ந்தோர் கோவையை விட்டே ஓடுகின்றனர்.

 • mohan - chennai,இந்தியா

  காரணம், வேலை இல்லை....தொழில் மந்தம்...கோவை, திருப்பூர், ஈரோடு , மற்றும் சுற்றி உள்ள பகுதிகள்...

 • duruvasar - indraprastham,இந்தியா

  கொங்கு பகுதியில் ஆட்களை கொண்டுவரும் பணியை செந்தில் பாலாஜி அருமையாக செய்துகொண்டிருக்கிறார். விமான நிறுவனங்கள் அவரை அணுகலாம்.

Advertisement