dinamalar telegram
Advertisement

ஹிந்தி விவகாரத்தில் தி.மு.க.,வினர் சமரசம்: பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி காட்டம்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''ஹிந்தி விவகாரத்தில் தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன், வியாபாரம் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர்,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறினார்.



கோவை மாவட்ட பா.ஜ., சார்பில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தெற்கு தொகுதிக்குட்பட்ட ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் தேசிய கொடிகளை வழங்கினார்.பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நாட்டு மக்கள், 75வது சுதந்திர தினத்தை திருவிழா போல் கொண்டாட வேண்டும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.தி.மு.க.,வினர் அரசு பள்ளி குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதை எதிர்க்கின்றனர். ஆனால், வியாபாரம் என வரும் போது, ஹிந்தி திரைப்படங்களை வெளியிடுவது, ஹிந்தி சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என, அவர்களது தனிப்பட்ட குடும்ப லாபத்துக்காக சமரசம் செய்துகொள்கின்றனர்.



தமிழகத்தில் ஏழை, எளிய குழந்தைகளை இன்னொரு மொழி கற்க எதிர்க்கின்றனர். புதிய கல்விக் கொள்கையை ஒவ்வொருவரும் தாய் மொழியில் கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறுகிறார். அந்தக் கொள்கையை தான் தி.மு.க., எதிர்கிறது. நாங்கள் தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை அனுமதிக்க வேண்டும் என கூறி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (87)

  • DOSS - புதுச்செரி,இந்தியா

    ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையை சிறடித்துவிட்டு நவோதயம் வேண்டாம் என்று அழித்துவிட்டு திடியிரென ஞானோதயம்.

  • Balaji - chennai,இந்தியா

    வானதி மேடம் புதிய கல்வி கொள்கை என்பது தவறான வார்த்தை. தேசிய கல்வி கொள்கை. பிஜேபி புதியதாக கல்வி கொள்கை எடுத்து வரவில்லை. இருக்கும் பழைய தேசிய கல்வி கொள்கையை அடுத்து வரும் சந்ததிக்கு உதவும் வகையில் மாற்றி இருக்கிறார்கள்

  • venugopal s -

    நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் பாஜகவை நம்பப் போவதில்லை. உங்களைவிட மோசமான திமுகவே பரவாயில்லை என்று தான் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறோம்.

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    சமரசம் என்பது நல்ல செயலுங்க....அதில எதுக்கு உங்களுக்கு காட்டம்?...'இந்தி'ங்கிற விவகாரமே வேண்டாமாக்கும்....அப்ப, 'இந்தியா'வை தமிழ்நாட்டிலே எல்லாரும் யா....யா என்றா சொல்வது?....'இந்திரா'வை ரா...ரா என்றா அழைப்பது?...

  • Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்

    தமிழ் மாணவர்கள் ஹிந்தி படித்து முன்னேற தடுக்கும் இந்த திருட்டு ரயில் கூட்டம்... காசு சம்பாரிக்க ஹிந்தியை ஆதரிக்கும் மொள்ளமாரிகள்.

Advertisement