dinamalar telegram
Advertisement

பெரியாறு அணை நீர் வெளியேற்றம் கேரள மக்களை அச்சுறுத்தும் அவலம்

கூடலுார்: பெரியாறு அணையில் இருந்து கேரளப்பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீரால் மிகப்பெரிய பாதிப்பு போன்ற மாயையை ஏற்படுத்தி கேரள மக்களை அம்மாநில அரசியல்வாதிகள் அச்சுறுத்துவதாக தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.


பெரியாறு அணையில் இருந்து கேரளப்பகுதிக்கு அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, உப்புதரா, சப்பாத்து வழியாக சென்று இடுக்கி அணை அடையும். பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணை வரை பெரியாறு ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேறும் வகையில் இருந்தது. காலப்போக்கில் பெரியாறு கரை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், ஓட்டல்கள் என முளைத்தன.


இதனால் 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேறும் போது ஆக்கிரமிப்பு வீடுகளை ஒட்டி செல்லும் நிலை உருவாகியுள்ளது. 2018ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியாறு அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் மட்டுமல்லாது அப்பகுதியில் பெய்த கனமழையாலும் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகள் சேதம் அடைந்தன.


ஆக்கிரமிப்புகளை அனுமதித்து ஓட்டுக்காக குரல் கொடுத்து வரும் கேரள அரசியல்வாதிகள் தற்போது பெரியாறு அணையில் வெளியேற்றப்படும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீருக்கு அப்பகுதி அழிந்து விடும் என்ற மாயையை ஏற்படுத்துகின்றனர். அன்வர் பாலசிங்கம், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப் பாளர்: அணை மீது கேரள மக்கள் மிகப்பெரிய அச்சம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே 30க்கும் மேற்பட்ட இடங்களில் அவசரகால முகாம்களை கேரள அரசு அமைத்துள்ளது.


அணை உபரிநீர் மட்டுமல்லாது கேரள வனப்பகுதிகளில் இருந்து இணையும் 18 துணை ஆறுகளான தடியம்பாடு, கீரித்தோடு, பனங்குடி உட்பட 18 சிறு ஆறுகளின் தண்ணீரும் கலந்து இடுக்கி அணைக்கு செல்கிறது. ஆனால் பெரியாறு அணையில் இருந்து மட்டுமே தண்ணீர் வருவதாக கேரள மக்களை நம்ப வைக்கின்றனர். இடுக்கி அணையில் இருந்து வெளியேறும் ஆற்றை பெரியாறு என அழைத்து பெரியாறு அணைக்கான அச்சத்தை கேரள மக்களிடம் அங்குள்ள அரசியல்வாதிகள் நஞ்சாக பொய் பிரசாரத்தின் மூலம் பரப்புகின்றனர். இது கண்டிக்கத்தக்கது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement