dinamalar telegram
Advertisement

குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

ADVERTISEMENT
தென்காசி: கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் ஆக.,1 ம் தேதி முதல் 5ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. போலீசார் அருவிகளுக்கு செல்லும் பாதையில் தடுப்புகள் வைத்து யாரும் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர். இதனால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் 5 நாட்களுக்கு பிறகு நேற்று (ஆக.,6) ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் உற்சாகமாக அருவிகளில் குளித்து சென்றனர். ஆனால் வெள்ளப்பெருக்கு குறையாததால் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று(ஆக.,7) விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement