dinamalar telegram
Advertisement

முனியப்பன் கோவில் மண்டல பூஜை

தர்மபுரி, தர்மபுரி அடுத்த, தடங்கம் முனியப்பன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று மண்டல பூஜை விழா நடந்தது.
தர்மபுரி மாவட்டம், ஒட்டப்பட்டி அவ்வைவழி சாலையில் புதியதாக முனியப்பன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த மாதம், 14ல் நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று அரை மண்டல பூஜை நடந்தது. விழாவில், முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள், கோவில் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் முனுசாமி செய்திருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement