dinamalar telegram
Advertisement

தனியார் நிறுவனத்தில் ரூ.11.18 லட்சம் திருட்டு

தர்மபுரி, தர்மபுரி அடுத்த கே.என்.சவுளூரை சேர்ந்தவர் சங்கர், 35; இவர், தனியார் டெலிவரி குழு தலைவராக உள்ளார். கடந்த, 31ல் இரவு தங்களது நிறுவனத்தில் கலெக்சன் ஆன பணத்தை, அலுவலகத்திலுள்ள
லாக்கரில் வைத்து விட்டு, வீட்டுக்கு சங்கர் சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் காலை, 5:15 மணிக்கு சங்கர் தன் அலுவலகத்தை திறக்க வந்த போது, அலுவலகத்தின் ஷட்டர் உடைக்கப்பட்டும், உள்ளே லாக்கரும் உடைக்கப்பட்டு அதிலிருந்த, 11 லட்சத்து, 18 ஆயிரத்து, 266 ரூபாயை மாயமானது தெரிந்தது. சங்கர் புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் இரு தனிப்படை அமைத்து விசாரித்து
வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement