dinamalar telegram
Advertisement

டூவீலர் மீது அரசு பஸ் மோதி 4 பேர் படுகாயம்

குளித்தலை, கோவை மாவட்டம், பூலக்காட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார், 35; இவர், தனக்கு சொந்தமான, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில், நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில் கோவையிலிருந்து, திருச்சி நோக்கி சென்றார். அப்போது, திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணராயபுரம் யூனியன் ஆபீஸ் எதிரே, திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதி துாக்கி வீசியது.
இதில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சித்தலவாயை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி காந்திமதி, 36, மகன் நவீன், 14, செந்தில், 39, ஆகியோர் மீது டூவீலர் மோதியது.

இதில், நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து, சதீஷ்குமார் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் அரசு பஸ் டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை சேர்ந்த ராஜப்பா, 47, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement