dinamalar telegram
Advertisement

இன்று ஆடிப்பெருக்கு விழா கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

கரூர், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கரூர் மாவட்டத்தில் கரையோர பகுதிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களின் முக்கிய திருவிழாவான, ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த, 2018க்கு பின், காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் ஓடுகிறது.

இதனால், இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆற்றில் புனித நீராட உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், காவிரியாறு பகுதிகளான வேலாயுதம்பாளையம், புகழூர், வாங்கல், நெரூர் மற்றும் மாயனுாரில், ஆடிப்பெருக்கையொட்டி நீராடுவது வழக்கம். அதேபோல், அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரியாண்டாங்கோவில் தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் குளிப்பர்.
இதனால், 200க்கும் மேற்பட்ட போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில், பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபட உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான, காவிரியாற்றின் ஓரத்தில் நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது.
இன்று ஆடிப்பெருக்கு விழாவுக்காக, நெரூர் செல்லும் பொதுமக்கள் காவிரியாற்றில் புனித நீராடுவதால், அங்கும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement