இரு சிறுமியரை பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருகே, இருவேறு இடங்களில், சிறுமியரை பலாத்காரம் செய்த இரு வாலிபர்கள் போக்சோவில் கைதாகினர்.
* திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த சீனந்தலை சேர்ந்தவர், பொக்லைன் டிரைவர் சின்னராஜ், 24; இவர், 17, வயது சிறுமியை காதலித்து வந்தார். கடந்த, 23ல் வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. புகார் படி, போளூர் போலீசார் விசாரித்தனர். இதில், சிறுமியை சின்னராஜ் கடத்தி கடந்த, 30ல் திருமணம் செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

* திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்தை சேர்ந்தவர் குருபிரசாத், 20; பெங்களூருவில் பழக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது, திருவண்ணாமலையை சேர்ந்த, 16, வயது சிறுமியுடன், சமூக வலைதளத்தில் பழக்கம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். குருபிரசாத் கடந்த பிப்.,ல் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதித்த சிறுமியை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது சிறுமி, நான்கு மாத கர்ப்பம் என தெரிந்தது. புகார்படி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார், குருபிரசாத்தை போக்சோவில் கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!