dinamalar telegram
Advertisement

காவ்யாவின் குமரிக் கண்ட ஆராய்ச்சி

ADVERTISEMENT
நீலமும் சிவப்புமாக ஆக்கிரமித்துள்ள ஓவியங்கள் குறித்து காவ்யா கூறியதாவது:


சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது ஆசை. கடல், வானம், மேகம் என இயற்கை சார்ந்த சின்னஞ்சிறு உலகம் தான் எனது ஓவியத்தின் இலக்காக இருந்தது. பி.எஸ்சி., புவியியல் முடித்தபின் ஐயை மகளிர் அமைப்பு நிறுவனர் ஒடிசா பாலசுப்ரமணியனின் குமரிக்கண்ட ஆராய்ச்சியில் இணைத்து கொண்டேன். அதன்பின் ஓவியத்தின் மீதான பார்வை மாறியது. தற்போது கருத்தியல் சார்ந்ததாக மாறியுள்ளது. நிலத்தின் மீதான ஈர்ப்பை விட கடலின் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. குறிப்பாக கடலால் அழிந்துபோன குமரிக்கண்டம் எனது ஆர்வத்தை துாண்டியது.


கடலுக்கு அடியில் உள்ள உலகமே தனி. அதைப் பார்ப்பவர்களை தவிர மற்றவர்களுக்கு தெரியாது.பழங்காலத்தில் கடல் பயணம் மேற்கொள்வதற்கு ஆமைகள் வழிகாட்டியாக இருந்ததாக கேள்விப்பட்டேன். குறிப்பாக தென் தமிழகத்தில் இருந்து பாய்மர படகில் ஆமைகள் வழிகாட்ட தென்கொரியா தப்பிச்சென்ற பெண் அங்கு இளவரசியான கதை என்னை கவர்ந்தது.


கொந்தளிக்கும் கடலில் அந்தப் பெண் பாய்மர படகில் செல்வது போன்ற ஓவியம், நீந்திச் செல்லும் ஆமை, ஸ்கூபா டைவிங் மூலம் கடலாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் பற்றிய ஓவியம், வழிகாட்டும் கேம்பஸ் ஆகியவற்றை அடர்நீல வண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரைந்துள்ளேன். வாளேந்தும் பெண், டாக்டர் என பெண்களின் பல்வேறு பரிமாணங்களை அடர் சிவப்பில் வரைந்துள்ளேன். மரைன் ஜியாலஜி படிக்க வேண்டும். கடலைப் பற்றி இன்னும் ஆழமாக தெரிந்து கொண்டு கடல்சார்ந்த ஓவியங்கள் வரைய வேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement