dinamalar telegram
Advertisement

காணொலியில் திருமணம்பதிவு சான்று வழங்க உத்தரவு

மதுரை:இந்திய காதலிக்கு, அமெரிக்காவில் உள்ள காதலனுடன் நடைபெற உள்ள காணொலி திருமணத்திற்கு பதிவுச் சான்று வழங்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், வெளிச்சந்தையைச் சேர்ந்த வம்சி சுதர்ஷினி தாக்கல் செய்த மனு: பி.இ., படித்துள்ளேன். அமெரிக்காவிலுள்ள ராகுல் எல்.மதுவும், நானும் காதலித்தோம். அவர் இந்தியாவில் பிறந்தவர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம்.

அவர் திருமணத்திற்காக இந்தியா வந்தார். சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள எங்களுக்கு முழு தகுதி உள்ளது.திருமணத்தை பதிவு செய்யக்கோரி, மணவாளக்குறிச்சி சார் - பதிவாளருக்கு விண்ணப்பித்தோம். அவரது முன்னிலையில் ஆஜரானோம். போதிய காரணங்கள் இன்றி விண்ணப்பத்தை நிராகரித்தார்.
விசா காலம் முடிந்ததால், ராகுலால் மேலும் காத்திருக்க முடியவில்லை. அமெரிக்கா சென்றார்.தற்போது அவரால் இந்தியா வர முடியாத சூழல். இருவரும் காணொலி மூலம் திருமணம் செய்ய, அதை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்து, சான்றிதழ் வழங்க சார் - பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு வம்சி சுதர்ஷினி மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:'ஆன்லைன்' மூலம் மெய்நிகர் இருப்பை காண்பித்து, திருமணம் நடத்த சிறப்பு திருமணச் சட்டம் தடையாக இருக்காது என்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வி.ராமசுப்ரமணியன் அமர்வு, 'சிறப்பு திருமணச் சட்டம் 1954ல் இயற்றப்பட்டது.
கணினி, இணைய தொழில்நுட்பம் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது.'தொழில்நுட்பத்துடன் இணைந்து சட்டம் செல்ல வேண்டும். சட்டம் மிகவும் இறுக்கமாக இருக்க முடியாது' என, கருத்து வெளியிட்டுள்ளது.
மனுதாரர் திருமணத்தை நடத்த எந்த சட்ட தடையும் இல்லை என, நம்புகிறேன். மனுதாரர் ராகுலிடமிருந்து 'பவர் ஆப் அட்டர்னி' பெற்றுஉள்ளார். மனுதாரர் தனட் மற்றும் ராகுல் சார்பில் திருமண சான்று புத்தகத்தில் கையொப்பமிடலாம். பின் சார் - பதிவாளர் சான்றிதழ் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement