dinamalar telegram
Advertisement

இன்ஸ்., கையெழுத்து போட்ட கில்லாடி ஏட்டு சஸ்பெண்ட்

ADVERTISEMENT
நாகர்கோவில்:இன்ஸ்பெக்டர் கையெழுத்தை போலியாக போட்டு, சான்றிதழ் வழங்கிய கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு கோபால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
நில மோசடியை தடுக்க பத்திரப்பதிவு நடைமுறை கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டேஷன்களில் பத்திரங்கள் தவறி விட்டதாக சான்றிதழ் பெற்று முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.முறைகேடாக வழங்கப்பட்ட சான்றிதழ்களை சரி பார்க்கும் பணி நடந்தது. சுசீந்திரம் போலீஸ் ஸ்டேஷனில் வழங்கப்பட்ட ஒரு சான்றிதழை ஆய்வு செய்த போது, இன்ஸ்பெக்டர் கையெழுத்து போலியாக இடப்பட்டது தெரிந்தது.
சான்றிதழ் பெற்றவரிடம் விசாரித்த போது, ஏட்டு கோபால் சான்றிதழ் வழங்கியதாக கூறினார். இதையடுத்து, ஏட்டு கோபாலை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement