dinamalar telegram
Advertisement

குரங்கம்மை சந்தேகம் நான்கு பேர் அனுமதி

நாகர்கோவில்:குரங்கம்மை சந்தேகத்தில், நான்கு பேர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில், குரங்கம்மை பாதிப்பு பதிவான நிலையில், தமிழகத்தில் பரவாமல் தடுக்க, எல்லை பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன.இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நான்கு பேருக்கு, இந்த நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு உள்ளன.அவர்களுக்கு சாதாரண அம்மை நோய் தான் என, சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

தக்கலை அருகே வில்லுக்குறியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள் என நான்கு பேர் தொடர் காய்ச்சலால் அவதியுற்றனர்.பின் அவர்களது, உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. இது, குரங்கம்மை நோய்க்கான அறிகுறி என்ற சந்தேகத்தில், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் குரங்கம்மை வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இது சாதாரண அம்மை நோய் போல தெரிந்தாலும், இவர்களது ரத்த மாதிரி புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement