dinamalar telegram
Advertisement

தண்ணீருக்குள் ஆழ்த்தி குழந்தையை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்

நாகர்கோவில், ஆரோக்கியபுரத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் 4 வயது குழந்தையை கடத்தி தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த ஆரோக்கிய கெபின் ராஜ். இவரது மனைவி சகாய சிந்துஜா. மகன் ரெய்னா 4. ஆரோக்கிய கெபின் ராஜுக்கும் அந்தோணிசாமி, 36, என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்தது.

இப்பிரச்னையில், 2019 மார்ச் 17ல் குழந்தை ரெய்னாவை அந்தோணிசாமி இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று கீழ மணக்குடியிலுள்ள தென்னந்தோப்பு மின் மோட்டார் பம்ப் செட் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். அந்தோணிசாமியை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அருள்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் லீனஸ் ராஜ் ஆஜரானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement