dinamalar telegram
Advertisement

ஏராளமான பெண்களை சீரழித்த காமுகன் நீதிமன்றத்தில் ஆஜர்

நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் ஏராளமான பெண்களை சீரழித்து வீடியோ பதிவு செய்ததாக கைது செய்யப்பட்ட கொடூரன், ஐந்தாவது முறையாக நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோட்டார் கணேசபுரத்தைச் சேர்ந்த தங்க பாண்டியன் மகன் காசி, ௨௭. சென்னை பெண் டாக்டர் மற்றும் நாகர்கோவில், 27 வயது பெண் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

அவரது கோழிப்பண்ணையில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் நுாற்றுக்கணக்கான பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய லேப்டாப்பை கைப்பற்றினர். தடயங்களை அழிக்க முயன்றதாக, தங்கபாண்டியனையும் கைது செய்தனர்.
காசி மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஓராண்டாக சிறையில் உள்ள இருவரது ஜாமீன் மனுக்களை, உயர்நீதிமன்றம் மதுரை கிளை பலமுறை தள்ளுபடி செய்தது.
நாகர்கோவில் இளம்பெண் புகாரில் பதிவான வழக்கில், காசி, தந்தை ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையில், டாக்டர்கள் சாட்சியமளித்தனர். பின், இருவரும் திருநெல்வேலி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement