dinamalar telegram
Advertisement

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விசாரிக்க வேலூர் தி.மு.க., - எம்.பி., விருப்பம்

ADVERTISEMENT
வேலுார் : ''வேலுார் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நடந்த ஊழலை, சி.பி.ஐ., விசாரிக்க, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்,'' என, வேலுார் தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் பேசினார்.

வேலுார் மாநகராட்சியில் நடந்து வரும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:வேலுார் மாநகராட்சியில் தற்போது, 963 கோடி ரூபாய் செலவில், 52 பணி நடக்கிறது. இதில், 512 கோடி ரூபாய் மதிப்புக்கு, 30 பணிகள் முடிந்துள்ளன. மேலும், 451 கோடி ரூபாய் அளவுக்கு, 22 பணிகள் நடக்கின்றன.

பாதாள சாக்கடை முடிக்கப்பட்ட சாலைகளில் வாகனங்கள் சிக்கினால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது அலுவலக மின் இணைப்பு துண்டிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

வேலுார், தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் பேசுகையில், ''வேலுாரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ., விசாரிக்கக்கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்.''அ.தி.மு.க., ஆட்சியில் டெண்டர் விட்டுள்ளனர். ''விரைந்து பணிகள் முடிக்க காலம் தாழ்த்துகின்றனர். தி.மு.க.,வுக்கும், முதல்வருக்கும் அவப்பெயர் ஏற்படுத்த இதுபோல் செய்கின்றனர்,'' என்றார்.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வேலுார் கார்த்திகேயன், அணைக்கட்டு நந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement