dinamalar telegram
Advertisement

அதிரப்பள்ளி அருவியில் குளிக்க தடை விதிப்பு

ADVERTISEMENT


வால்பாறை : அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணியர் குளிக்க, கேரள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கோவை மாவட்டம், வால்பாறையில் தென்மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அருவி, நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாப் பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா விலும் பருவமழை தீவிரமாக பெய்வதால், வால்பாறை - சாலக்குடி வழித்தடத்திலுள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வரத்து அதிகரித்து, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு குளிக்க கேரள வனத்துறையினர் தடை விதித்துள்ளதால், சுற்றுலாப் பயணியர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement