dinamalar telegram
Advertisement

கோவில்பாளையத்தில் மூவருக்கு கொரோனா

கோவில்பாளையம்;சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில், நேற்று மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில், நேற்று மூன்று பேருக்கு தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது. இடிகரை பேரூராட்சி, கீரணத்தம் ஊராட்சி, வெள்ளமடை ஊராட்சி ஆகியவற்றில் தலா ஒருவருக்கு என மூன்று பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. தொற்று பாதித்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டது. தொற்று பாதித்த மூவரின் குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்களுக்கு இன்று தொற்றுப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.ஊராட்சி பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பொதுஇடங்களில் முகக்கவசம் அணிந்து வரவேண்டியது அவசியம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement