தன்னார்வ அமைப்பு மரக்கன்றுகள் நடவு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், 'ஆலம் விழுது' சூழல் பாதுகாப்பு அமைப்பினர், மக்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.பறவைகளை காக்கவும், சூழலை மேம்படுத்தவும், வாரந்தோறும் பழ வகை மரக்கன்றுகள் நடவு செய்வதுடன், சூழல் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.இந்நிலையில், நேற்று, 146வது வார களப்பணியாக, பொள்ளாச்சி ஜோதிநகரில் சிறுவர் பூங்கா அருகே, மகிழம், புங்கன், இலுப்பை, கொய்யா, பாதாம் உள்பட பல வகை மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!