டில்லியில் இருந்து துபாய் சென்ற இந்திய விமானம்; பாகிஸ்தானில் தரையிறக்கம்
இந்த செய்தியை கேட்க
Your browser doesn’t support HTML5 audio
புதுடில்லி: டில்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
டில்லியில் இருந்து துபாய் கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி-11 விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடிவுசெய்தனர். அதன்படி கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‛விமானத்தின் இண்டிகேட்டர் விளக்கு செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.
விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறங்கியது மற்றும் பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை, விமானம் சாதாரணமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுகிறது,' என்றார்.
டில்லியில் இருந்து துபாய் கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி-11 விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடிவுசெய்தனர். அதன்படி கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‛விமானத்தின் இண்டிகேட்டர் விளக்கு செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வாசகர் கருத்து (4)
Something is seriously wrong with this airlines aircraft. They should all be grounded and checked thoroughly, even if it is going to take a few weeks.
அங்கே அவனுங்க இருக்குற நிலைமையில் நமது பயணிகளிடம் இருந்து பணம் பிடுங்க வந்துவிடப் போகிறார்கள் ..... இங்கே துக்கடா துக்கடா பேசும் லுங்கிபாய்ஸ் ....... நாளைக்கு உங்களது தலைமுறைகளுக்கும் அவர்களின் கதிதான் ..... வேணும்னா அணுகுண்டை பிச்சி பிச்சி கடிக்கலாம் பசியாற ......
காரமான ஜெட் ஊர்தியின் இரண்டாவது தொழில்நுட்ப கோளாறு ஒரே வாரத்தில்...பத்திரம்
ஸ்பீஸ் ஜெட் தி மு காவுக்கு சொந்தமானது , வேணுமுன்நே பாகிஸ்தானுல இறக்கியிருப்பாங்களோ .... எதாவது பிசினஸ் டீலோ