dinamalar telegram
Advertisement

‛‛கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி: சர்ச்சை பெண் இயக்குனருக்கு குஷ்பு ‛‛கும்மாங்குத்து

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : லீனா மணிமேகலை வெளியிட்ட ‛காளி' போஸ்டரில் காளி தெய்வம் புகைப்பிடிப்பது போன்று இருந்ததற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அவர் மீது பல ஊர்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இது கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி என லீனாவிற்கு நடிகை குஷ்பு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மாடத்தி, செங்கடல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லீனா மணிமேகலை. தற்போது அவர் இயக்கி, நடித்து வரும் டாக்குமென்டரி படம் 'காளி'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் காளி வேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இந்துக்கள் புனிதமாக வணங்கும் காளி தெய்வத்தை இழிவுப்படுத்துவதாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. "அரெஸ்ட் லீனா மணிமேகலை" என்ற ஹேஷ்டாக் வைரலாக பரவியது.

இதைத்தொடர்ந்து வினி ஜிண்டால் என்ற வழக்கறிஞர் டில்லி போலீசில் லீனா மீது புகார் கொடுத்துள்ளார். இதேப்போல நெல்லை உள்ளிட்ட நாடு முழுவதும் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லீனாவிற்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.இதற்கு லீனா மணிமேகலை, “எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்'' என தெரிவித்துள்ளார்.

குஷ்பு எதிர்ப்புஇந்த விவகாரத்தில் லீனாவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் நடிகையும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான குஷ்பு. அவர் கூறுகையில், ‛‛படைப்பாற்றலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே படைப்பாளிகள் கடவுளை இப்படி சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி, வன்மையான கண்டனங்கள்'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (48)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  கீழ் தராமான பெண்.யார் தூண்டுதலால் செய்திருந்தாலும் தண்டிக்க பட வேண்டியது. பெண்ணுரிமையய் தவர்ராக உபயோகிக்கும் கீழ் தரமான ஜென்மம்.

 • Umapathy - Madipakkam,இந்தியா

  இவளின் பின்னணியில் திமுக வின் கருப்பற்குட்டம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது இன்னும் நான்கு ஆண்டுகள் இது போன்று இந்து அவமான செயல்கள் நிறைய அரங்கேறும் நன்றக உறங்கவும் இந்துக்களே .....

 • ravi - chennai,இந்தியா

  லீலா மணிமேகலை நீங்கள் என்னவோ புரட்சிகரமாக எதையோ செய்ததுபோல் பெருமை அடையாதீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் இஸ்லாத்தையும் கிறித்துவத்தையும் இழிவு செய்வதுபோல் ஒரு படத்தை எடுத்துப்பாருங்களேன். தேசவிரோத இந்துவிரோதமாக பேசி தொலைக்கிறார்கள். அதை இந்துக்கள் கண்டுகொள்வதில்லை. இந்துக்கள் அவர்களை வெறுமென குலைக்கும் நாய்களாகத்தான் பார்க்கிறார்கள். இந்தியாவில் இருந்துக்கொண்டு எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்டு பாகிஸ்தானுக்காகவும் இஸ்ரேலுக்காகவும் மூச்சுவிடும் தேசத்துரோகம் கூட்டம் இந்தியாவில் இருக்கிறது. நீ எந்த விதமான ஜந்து என்று புரியவில்லை. நல்ல பிறப்பாக இருக்க வாய்ப்பே இல்லை. இந்துக்கள் தங்களின் தாய்க்கு இணையாக நினைக்கும் கடவுளை இழிவு செய்த நீ உருப்படமாட்டாய். 2032இல் நீ தெருத்தெருவாக பிச்சை எடுப்பாய் என்பது உறுதி.

 • ravi - chennai,இந்தியா

  எந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை-7.17 கோடி அபராதம் என்று அபுதாபி அரசு சொல்கிறது. இந்தியா அப்படி சொன்னால் தினம் குறைந்தது 100 திமுக கொத்தடிமைகள் உட்பட முஸ்லிம் நண்பர்கள் சிறைக்கு செல்வார்களே.

 • ravi - chennai,இந்தியா

  இந்துவிரோதமாக பேசும் பொறுக்கிகள் நாட்டில் அதிகமாகிவிட்டது. இந்துக்களை அழிப்போம் என்று ஒரு பேசுகிறாள். மாநிலங்கள் வேடிக்கைதான் பார்க்கினறன. இந்தமாதிரி மக்களை தூண்டி கலவரங்களை ஏற்படுத்தப்பார்க்கும் ரௌடிகளை குண்டர் சட்டத்தில் குறைந்தது 20 வருடங்கள்சிறைப்படுத்தி அவர்களின் திமிரை அடக்கவேண்டும்.

Advertisement