ராகுல் வீடியோவை தவறாக சித்தரித்த செய்தியாளர் கைது
இந்த செய்தியை கேட்க
கேரளாவின் வயநாட்டில் தன் அலுவலகம் சூறையாடப்பட்டது பற்றி ராகுல் பேசிய பேச்சின் வீடியோ பதிவை, ராஜஸ்தானின் உதய்பூரில் டெய்லர் படுகொலை செய்யப்பட்டதுடன் தொடர்புப்படுத்தி டிவி செய்தியாளர் ரோகித் ரஞ்சன் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பல தலைவர்கள் அதனை வெளியிட்டு ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அந்த வீடியோ பொய் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அந்த வீடியோவை நீக்கினர். இதற்கு அந்த டிவி நிறுவனம் மன்னிப்பு கோரியது. இருப்பினும், இந்த வீடியோ வெளியிட்டதற்கு எதிராக அந்த நிறுவனம் வாசலில் காங்கிரசார் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
ராகுல் குறித்து அவதூறு பேசியதாக ரோகித் ரஞ்சன் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக அவரை கைது செய்வதற்கு சத்தீஸ்கரின் ராய்ப்பூர் போலீசார், உ.பி.,யின் காசியாபத்தின் இந்திரபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சத்தீஸ்கர் போலீசார் என்னை கைது செய்வதற்கு வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர். இது சட்ட விரோதம் எனக்கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ராய்ப்பூர் போலீசார், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது சட்டமல்ல. இருப்பினும் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் கைது வாரண்ட்டை போலீசார் காட்டுவார்கள். போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணையில் இணைந்து, உங்களது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.
உ.பி.,யின் காசியாபாத் போலீசார் வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரம் உள்ளூர் போலீசாரின் கவனத்தில் உள்ளது. இந்திராபுரம் போலீஸ் ஸ்டேசனும் அருகில் உள்ளது. சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியிருந்தனர்.
இதனிடையே, ரோகித் ரஞ்சனை, சத்தீஸ்கர் போலீசார் கைது செய்வதை தடுக்கும் போருட்டு, காசியாபாத் போலீசார், அவரை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு அழைத்து சென்றனர். தற்போது, அவர் எங்கு உள்ளார் என்ற விபரத்தை தெரிவிக்காத காசியாபாத் போலீசார், அவர் மீது ஜாமினில் வெளியே வரக்கூடிய வகையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து (31)
இன்னமும் ஜுபைர் செய்தது தவறு என்பது கூட உணராத ஒரு பிறப்பு ,
ராஜஸ்தானில் கன்னையா லாளை கொன்ற இரண்டு காட்டுமிராண்டிகளை ஜுபைர் போன்றவர்கள் கொண்டாடுவார்கள்
இங்கே ஊரோடு ஒத்து வாழ கஷ்டமாக, பிரதமரை பிடிக்காமல் இருந்தால் உங்களுக்காக ஜின்னாஹ் கேட்டு வாங்கிய நாடுகளுக்கு போகலாமே.
ரோஹித் சர்தானா ..திறமை வாய்ந்த டீவி விவாதங்கள் நடத்தியவர் ..40 வயதிலேயே கொரோனாவிற்கு பலியாகி விட்டார் ...
பொய்யரின் மீது பொய் பேசியதால் கைதா? அப்ப, அவர் பேசியது உண்மைதானே?
இது வரை ராகுல் கூறியுள்ள பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு வழக்குப் போட்டால் ஆயுள் முழுவதும்😇 ஜெயிலில்தான் இருக்க வேண்டியிருக்கும். பொய் சொல்லுவதில் பாட்டியின் வழி. RSS பற்றி அவதூறு பரப்பியதற்காக ஆறாண்டுகளாக வாய்தா வாங்கி கொண்டிருக்கிறது .
ராஜ் நல்லாவே அடிச்சு விடறீங்க. அவை என்ன மசோதாக்கள் என்று சொல்ல முடியுமா? 1. சில கூட்டுறவுச் சங்கங்களுக்கு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா. இது தாங்கள் நிர்வகிக்கும் சங்கங்களுக்கு "உதவி" செய்ய. 2. பல்கலைகளுக்கு துணை வேந்தர் தேடும் முறை. இது விடியல் அரசு மாதிரி தங்களுக்கு "வேண்டியவர்களை" பதவியில் அமர்த்த. இந்த மாதிரியான மசோதாக்களை ஆளுநர் அனுமதிக்க மாட்டார்.
ராகுல் குறித்து அவதூறு பேசியதால் சட்டம் தன் கடமையை உடனே செய்கிறது. ஆனால், உதய்ப்பூரில் ஒரு ஏழை தையல்காரர் ஏதோ சொல்லிவிட்டார் என்று அவர்மீது கோபம்கொண்டு, அவரை பட்டப்பகலில் க ழுத் தை அறுத்து கொன்றவர்கள் மீது இன்றுவரை அதே சட்டத்தின் மூலம் தண்டிக்கமுடியவில்லை. என்னடா உங்கள் சட்டமும், நீதியும்...?
கொலையாளி பிஜேபி காரன்
பொய் செய்தியை பரப்ப வேண்டாம்.
//கொலையாளி பிஜேபி காரன்...// வயித்துக்கு சோறு தின்பவன் இப்படி பேசமாட்டான்....
ஒரு கட்சியில் ஊடுருவுவது பலகாலமாக நடைபெறுகிறது. காங்கிரசில்அப்பொழுதைய கம்யூனிஸ்ட்களும் சோஷலிஸ்ட்களும் ஊடுருவி காங்கிரசை சோஷலிசம் பேச வைத்தனர் என்பது வரலாறு. பாகிஸ்தானிய திவீரவாதக் கும்பல் அதே மாதிரியான சூழ்ச்சியை இங்கே கையாண்டது. ஒரு வித்யாசம். பாஜகவுக்கு உள்ளே என்ன நடக்கிறது, எதாவது கொலை, கிளர்ச்சி செய்து பாஜக மீது பழியைப் போடலாம் என்ற சூழ்ச்சி. ,
இவன் பெயர் ஜுபைர் என இருந்திருந்தால் இந்நேரம் உபி அரசு துரித நடவடிக்கை எடுத்திருக்கும் ஆனால் இவன் பெயர் ரோஹித் அல்லவா சத்தீஸ்கர் போலீஸ் கைது செய்ய வரும் வரை யோகியின் உபி காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதிலிருந்தே தெரிகிறது இவனை இதுபோல வீடியோ மார்பிங் செய்ய சொன்னதே பாஜக ரவுடிகள் தான் என்பது , கடைசியில் இவனை சத்தீஸ்கர் போலீசிடம் இருந்து காப்பாற்றி எங்கோ ராஜா மரியாதையோடு வைத்திருக்கிறார்கள் , இல்லாததை பொய்யாக ஒளிபரப்பிய இவனை பாதுகாக்கிறது மோடி அரசு ஆனால் நூபுர் சர்மா பேசியதை வெளியிட்டதற்க்காக பத்திரிகையாளர் ஜுபைர் கைது செய்யப்பட்டு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது இதுதான் மோடி அரசின் சர்வாதிகாரத்திற்கு எடுத்துக்காட்டு.