dinamalar telegram
Advertisement

போலீஸ் செய்திகள்

56 கிலோ வெள்ளி மோசடி

மதுரை: சேலம் நாயக்கன்பட்டி குமார் 41. இவரிடம் மதுரை பிபீகுளம் கிருஷ்ணமூர்த்தி, மகன் பிரசன்ன வெங்கடேசன் ஆகியோர் நகை தொழில் செய்வதற்காக 52 கிலோ வெள்ளி, ரூ.2.50 லட்சம் பெற்று மோசடி செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

கார் கடத்தல்: மெக்கானிக் கைது

மதுரை: சின்ன சொக்கிக்குளம் லோகநாதன் 33. ஐ.டி., ஊழியர். தனது காரில் துாங்கிக்கொண்டிருந்தபோது, அவரை ஒத்தக்கடை மெக்கானிக் ரமேஷ் 30, அப்புறப்படுத்திவிட்டு காரை கடத்திச்சென்றார். தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. காரில் இருந்த ஜி.பி.எஸ்., கருவி உதவியுடன் ரமேைஷ போலீசார் கைது செய்தனர்.

பஸ் மோதி இளம்பெண் பலி

மதுரை: மதுரை ராஜிவ்காந்தி நகர் முத்துமுனியாண்டி 50. இவரது மகள் அமிர்தம் 26. நேற்றுமுன்தினம் தோழியின் டூவீலிரில் சென்றபோது புது விளாங்குடி அருகே தவறி விழுந்தார். அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ் மோதியதில் அமிர்தம் இறந்தார்.

கார் மோதி மாணவன் பலி

மதுரை: மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு சிவராம். இவரது மகன் மாதவன் 13. தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். அத்தை மகன் கார்த்தீபனுடன் 15, சைக்கிளில் பனையூர் - சிந்தாமணி ரோட்டில் வந்தபோது பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் மாதவன் இறந்தார். கார்த்தீபன் காயமுற்றார். காரை விட்டுவிட்டு தப்பி ஓடிய பிரகாைஷ சிலைமான் எஸ்.ஐ., அர்ஜூனன் தேடி வருகிறார்.

டூவீலர் மோதி மூதாட்டி பலி

திருமங்கலம்: கல்லணை புதுார் மீனாட்சி 70. நேற்று முன்தினம் இரவு மேலஉப்பிலிக்குண்டு விலக்கில் நடந்து வந்தபோது டூவீலர் ஒன்று மோதி இறந்தார். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவி கொலையில் கைது

கொட்டாம்பட்டி : பொட்டப்பட்டி தென்னந்தோப்பில் ஜூன் 29ல் பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் நத்தம் தாலுகா பஞ்சயம்பட்டி அர்ஜூனின் 40, மனைவி ராஜாத்தி 20, எனத்தெரிந்தது. இடியாப்ப கடை நடத்தும் அர்ஜூனன், தனது மனைவியின் நடத்தையை கண்டித்தார். ஆத்திரமுற்ற ராஜாத்தி, தான் ஏற்பாடு செய்த ஆட்கள் மூலம் கொலை செய்ய திட்டமிட்டார். இதை அறிந்த அர்ஜூனன், நண்பர் திருமணத்திற்கு செல்வோம் எனக்கூறி ராஜாத்தியை அழைத்துவந்து கத்தியால் குத்தியும், எரித்தும் கொலை செய்தார். அர்ஜூனன், மாமனார் ராஜூ, மாமியார் அரியம்மாள் 50, உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிராவல் மண் லாரி பறிமுதல்

சோழவந்தான்: நாகமலைபுதுக்கோட்டை அருகே பல்லோட்டியில் வடபழஞ்சி வி.ஏ.ஓ., பாண்டியன், எஸ்.ஐ., கணேஷ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். கரடிப்பட்டி கண்மாய் பகுதியில் இருந்து அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றிவந்த லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்களை தேடிவருகின்றனர்.

'போக்சோ'வில் கைது

அலங்காநல்லுார்: கருப்பாயூரணி அருகே விளத்துார் விக்னேஸ்வரன் 23, கூலித் தொழிலாளி. அலங்காநல்லுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றார். சமயநல்லுார் மகளிர் போலீசார் விக்னேஸ்வரனை 'போக்சோ'வில் கைது செய்தனர்.

நீரில் மூழ்கி பலி

திருப்பரங்குன்றம்: மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனி ஜெயராம் 40, மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளியாக மண் அள்ளும் இயந்திர டிரைவராக பணியாற்றினார். நேற்று காலை திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கினார். தீயணைப்பு வீரர்கள் ஜெயராம் உடலை மீட்டனர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement