வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா: மதுரையில் குடும்பம் குடும்பமாக தொற்று பரவுது
இந்த செய்தியை கேட்க
நேற்று புதிதாக 51 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். அரசு மருத்துவமனை, ரயில்வே மருத்துவமனையில் தலா ஒருவர், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் வீட்டுத்தனிமையில் 267 பேரும் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பு 292 பேர்.

டாக்டர்கள் கூறியதாவது: நகர்ப்புறத்தில் 75 சதவீதம், கிராமப்புறத்தில் 25 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றத்தில் பரவல் அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் பயத்தின் காரணமாக மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர்.தற்போது குடும்பம் குடும்பமாக தொற்று பரவி வருகிறது.
அறிகுறியுள்ள, அறிகுறியற்ற மற்றும் காய்ச்சல் நோயாளிகள் 500 பேருக்கு தினமும் சளி பரிசோதனை செய்யப்படுகிறது. தினசரி பாசிடிவ் 50 ஆக அதிகரித்துள்ளது. கூட்டமான இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து (11)
இது எல்லாம் கார்பொரேட் பொய் நம்பவேண்டாம், திருட்டு திமுக எலெக்ஷனுக்கு முன்.சொன்னது
கொரானா திடீர்ன்னு நெனச்ச நேரத்தில எங்கிருந்து வரும்...? ம்ம்ம்..
இந்தியாவின் ஜிடிபி அறிக்கை வர போகுதுன்னு அர்த்தம்.. அல்லது பணவீக்கம் உயர்ந்து விட்டது என்று பொருள்.. இப்போ சொல்லுங்க மக்கள் கவனம் ஜிடிபி பக்கம் இருக்குமா கொரநா பக்கம் இருக்குமா?
செயலர் ராதாகிருஷ்ணனை மாற்றிய பிறகு தமிழ்நாட்டில் தொற்று பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது. உங்களுக்கு எதை எடுத்தாலும் மோடி அரசை குற்றம் காண்பது வழக்கமாகிவிட்டது. கொரோன இந்திய அளவில் கட்டுக்குள்ளேதான் உள்ளது.
எது, இளவரசர் கூட்டம் நடத்துவார் என்ற பயமே இல்லையா? யாரங்கே? கூப்பிடுங்கள் இளவரசரை - உடனடியாக மதுரையில் வரலாறு காணாத மாநாட்டை நடத்தச் சொல்லுங்கள்.
கொரநா இருந்தால் இருக்கட்டுமே.. எய்ட்ஸ் இல்லையா.. கேன்சர் இல்லையா அது போல நம்மோடு இருந்து விட்டு போகட்டுமே.. ஏன் இதற்க்கு இப்படி கூப்பாடு போடுகிறீர்கள்
ஆறிலும் சாவு. நூறிலும் சாவு.. /// பிறப்பு என்று ஒன்று இருந்தால் நிச்சயம் இறப்பு இருந்து தானே ஆக வேண்டும். இந்த தெளிவு வந்தால் எதுக்கு பயம் வர போகுது சொல்லுங்க.
இந்துக்கள் பண்டிகை ஏதேனும் அருகில் வருகிறதா... ஓஹோ இன்னும் இரண்டு மாதங்களில் தீபாவளி வருகிறதே அதுக்கு இப்பொதே திருட்டு திராவிடம் கட்டமைக்கிறது....