dinamalar telegram
Advertisement

போலீஸ்காரரை தாக்கிய மூவருக்கு ‛காப்பு

அம்பத்துார்:இளம்பெண்ணிடம் வம்பு செய்தவர்களை விசாரிக்க சென்ற போலீஸ்காரரை தாக்கிய மூவர் கைதாகினர்.
சென்னை அம்பத்துார் அடுத்த, ஒரகடத்தைச் சேர்ந்தவர் மோனீஷ், 20. நேற்று முன் தினம் இரவு, போரூரைச் சேர்ந்த தன் தோழியை, பேருந்தில் அனுப்புவதற்காக, அம்பத்துார் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது, மது போதையில் வந்த மூவர், அந்த இளம்பெண்ணை தகாத முறையில் கிண்டல் செய்து, ஆபாசமாக பேசினர். அதை, அந்த பெண், தன் மொபைல் போனில் படம் பிடித்தார்.

அதைக்கண்ட மூவரும், மொபைல் போனை பறிக்க முயன்றனர். அவர்களை தடுக்க முயன்ற, கல்லுாரி மாணவர் மோனீஷையும் தாக்கினர்.இதையடுத்து, மோனீஷ், அங்கு ரோந்து பணியில் இருந்த அம்பத்துார் போலீஸ்காரர் பிரபாகரனிடம் புகார் செய்து, உதவி கோரினார். பெண்ணிடம் வம்பு செய்த மூவரையும், போலீஸ்காரர் கண்டித்தார். ஆனால், போலீஸ்காரரையும் அவர்கள் தாக்கினர்.
இதையடுத்து, அம்பத்துார் போலீசார், அங்கு சென்று மூவரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில், திருமுல்லைவாயலை சேர்ந்த பிரபு, 29, அயனாவரத்தை சேர்ந்த சூர்யா, 24, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த சிவகுமார், 44, என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement