dinamalar telegram
Advertisement

ரோட்டோரம் பதுக்கியரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி:கேரளாவுக்கு கடத்த முயன்ற, 1,100 கிலோ ரேஷன் அரிசியை, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத், எஸ்.ஐ., பாரதநேரு மற்றும் போலீசார், கோவை செல்வபுரம் ரோடு புட்டுவிக்கி நாயக்கர் அம்மன் தோட்டம் சந்திப்பு அருகே ரோந்து சென்றனர்.அப்போது, அங்கு கிடந்த மூட்டைகளை சோதனையிட்ட போது, 50 கிலோ எடை கொண்ட, 22 மூட்டைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அரிசியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்ததில், கோவை செல்வபுரத்தை சேர்ந்த சிவபெருமாள்,28, கேரளாவுக்கு கடத்த பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து, சிவபெருமாளை போலீசார் தேடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement